T.VK leader Velmurugan arrested in Tuticorin arrested by protesters in Tirupur
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்க்கு பலியானவர்களை சந்திக்க சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் ஆர்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 20 பேர் கைது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வதியுறுத்தி போரடிய பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவம் குறித்து நேரடியாக தூத்துக்குடிக்கு சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகனை விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனை கண்டிக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் சதிஷ் தலைமையில ஆர்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்பாட்டம் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரியும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியேரை பணி நீக்கம் செய்யவும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக முடவும் வழியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.