Tailoring training for transgender people in Perambalur district on behalf of the Government of Tamil Nadu
பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் அடையாள அட்டை பெற்ற மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி, நிலையான வருமானத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சுய தொழில் தொடங்கிட ஏதுவாக அரசு சார்பில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூன்றாம் பாலினத்தவர்கள் (திருநங்கைகள்) 11 நபர்களுக்கு ஒரு மாத காலத்திற்கான இலவச தையல் பயிற்சி லட்சுமி விலாஸ் தையல் பயிற்சி நிறுவனத்தின் மூலம் சமூக இடைவெளியுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.

மகிளா சக்தி கேந்திரா திட்டத்தில் மகளிர் நல அலுவலரின் ஒருங்கிணைப்புடன் பயிற்சி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது ஒரு மாதம் நடைபெறும். இப்பயிற்சியில் முககவசம், பாவாடை, சாதா மற்றும் நவீன வடிவமைப்பு கொண்ட ரவிக்கை (பிளவுஸ்) மற்றும் சுடிதார் போன்றவை தைத்திட பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் சான்றிதழ் வழங்கப்படும்.

இதன்மூலம் சுயதொழில் புரிந்திட, வங்கிகளில் கடன் பெறுவதற்கும், அரசின் இலவச தையல் இயந்திரங்கள் பெறுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என பெரம்பலூர் கலெக்டர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!