Tamil and Sanskrit! English Version Book launch ceremony in Chennai,
அதியமான் வரலாற்றுப் பேரவை விடுத்துள்ள அழைப்பு:
28, செப்டம்பர் 2018, மாலை 4 மணி 30 நிமிடத்திற்கு , மறைந்த தேவ பேரின்பன் எழுதிய தமிழும் சமஸ்கிருதமும் என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான TAMIL AND SANSKRIT நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. சென்னை, அண்ணாசாலை LLA கட்டிடத்தில் நடைபெறும்.
நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தலைமை ஏற்கிறார். நூலினை திராவிடர் கழகத்தின் தலைவர்
ஆசிரியர் வீரமணி வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பெற்று கொள்கிறார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் மொழி வல்லுனர்களும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.