Tamil Nadu BJP leaders should give up immoral politics: Interview with Congress state president Selvaperunthakai in Perambalur!

பெரம்பலூர்: காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் முன்னிலையில், மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் 40 சதவீதம் வாக்கு வங்கி நாம் வைத்திருந்தோம் தற்போது எந்த அளவிற்கு உள்ளது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் குறை நம்மிடம் தான் உள்ளது நாம் மற்றவர்களை குறை சொல்லக்கூடாது நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் உள்ளவர்களை காங்கிரஸ் கட்சியில் சேருங்கள் நம்மிடம் கட்டமைப்பு உள்ளது இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி பதவி வாங்கி வைத்துக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருப்பவர்களுக்கு பதவி பறிக்கப்படும் இவ்வாறு நாம் கட்சி பணி செய்யவில்லை என்றால் பெருந்தலைவர்கள், தியாகிகளின் ஆன்மாக்கள் நம்மை மன்னிக்காது . ராகுல் காந்தி கூறியுள்ளார் என் ரத்தம் இந்த மண்ணில் உள்ளது என்று அது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும் அவரைப்போல் அனைவரும் பாடுபட வேண்டும்

நம்மிடம் செல்வாக்கு இல்லாத காரணத்தினால் தான் தங்க மகன் அண்ணாமலை இறுமாப்புடன் நம் கட்சியை பற்றி பேசி வருகிறார் ஒற்றுமை இருந்தால் செல்வாக்கு இருந்தால் நம் மீது கை வைக்கும் பொழுது கிராமத்தில் நகரத்தில் என்று எங்கேயும் பஸ், வேன், லாரி ஏன் விமானத்தை கூட மறித்தாள் நம் பலம் அவர்களுக்கு புரியும் நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள் சமயங்களில் கூட்டணி கட்சிகளுடன் சிறு மனக்கசப்புகள் ஏற்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக 23 மாதங்கள் இருந்தாலும் 18 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் காய்ச்சல் வந்துவிடும் ஆகவே நமக்கு இன்னும் 18 மாதங்கள் தான் உள்ளது அதற்குள் நாம் கட்சியை வளர்த்தாக வேண்டும் பெரம்பலூர் சிறிய மாவட்டம் என்பதால் முதலில் இங்கு கட்சியை பலப்படுத்த வேண்டும். தங்கமகன், இந்திரா காந்தியை பற்றியும் நேருவை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் நாட்டை விட்டு ஓட பார்த்தார்களாம் தங்கமகனா பிடித்து அழைத்து வந்தார் என்ன அப்பட்டமான பொய், 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இன்று ஓர் இடத்தை நாம் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர். நிருபர்களிடம் கூறியதாவது;

நீட் தேர்வு வேண்டாம் என திமுக அரசு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் தமிழகத்திகற்கு நீட் வேண்டாம் என தொடர்ந்து கூறிவருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டுவரப்பட்டது என ஒரு பொய்யான தகவலை பாஜவினர் பரப்பினர். இது பொய்யான குற்றச்சாட்டு என ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளோம். நீட் தேர்வு பாஜ ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நீட் தேவையில்லை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியதை தமிழக பாஜ மாநில தலைவர் விமர்சித்து வருகிறார். விஜய் திமுக வழியிலும், காங்கிரஸ் வழியிலும் செல்கிறார் என கூறிவருகிறார்.

இது அநாகரீகமான குற்றச்சாட்டு. இதை வன்மையாக கண்டிக்கிறேன். அண்ணாமலை கற்பனையின் அடிப்படையில் பேசி வருகிறார். இதுபோன்ற விமரிசனங்களை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர். மாணவர் புரட்சி தேசத்தின் தலையெழுத்தை, மாநிலங்களின் தலையெழுத்தை மாற்றியுள்ளது. மாணவர்களுக்கு எதிரான கட்சி பாஜக. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லா கட்சி அது. இவர்கள் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மைக்குப் புறம்பான, பாஜ ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் பிரச்சனை செய்ய தயராகிவிட்டார்கள். இந்த ஆட்சி கம்பியின் மேல் நடப்பதுபோல் நடந்துக்கொண்டிருக்கிறது. அண்ணாமலை பழைய கனவில் இன்னமும் உள்ளார். ஐ.டி, இ.டியை, சிபிஐயை அனுப்பி எதிர்கட்சியினரை மிரட்டும்போக்கை, அநாகரீக அரசியலை தமிழக பாஜக தலைவர்கள் கைவிட வேண்டும். அவ்வாறு மிரட்டுவதால் யாரும் பொது வாழ்க்கையிலிருந்தும், அரசியலிலிருந்தும் விலகி விடப்போவதில்லை என கூறினார். பேட்டியின் போது மாநில பொது செயலாளர் வக்கீல் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!