Tamil Nadu Chief Minister M.K. Request to repair the roof of the school inaugurated in Stalin’s video so that rainwater does not accumulate!

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (26.09.2023) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், கீழப்பெரம்பலூர் நடுநிலைப் பள்ளியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறை கட்டடம், வ.கீரனூர் நடுநிலைப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டடம், மற்றும் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லாடபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறை கட்டடம் ஆகிய புதிய வகுப்பறைக் கட்டடங்களை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கலெக்டர் கற்பகம் க.கற்பகம் கீழப்பெரம்பலூர், வ.கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் குத்துவிளக்கு ஏற்றி பள்ளிக் கட்டடத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

லாடபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வுகளில் யூனியன் சேர்மன்கள் பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), மீனா அண்ணாதுரை(பெரம்பலூர்), மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கருணாநிதி, ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, பள்ளி-கல்வித்துறையினர் கலந்து கொண்டனர்.

இன்று திறப்பு விழா கண்ட பள்ளி கட்டங்கள் அவசரகதியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் கட்டப்பட்ட பள்ளியின் மேற்கூரை, மழை நீர் வடிந்து செல்லும் வகையில் அமைக்கப்படாததால் இன்று காலை பெய்த லேசான மழைக்கே மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. பெருமழை பெய்தால் தேங்கும் மழைநீர் கட்டத்தின் மேற்கூரையை பலவீனப்படுத்தி ஆயுளை குறைக்கும் என்பதால், அந்த பள்ளியின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழிக்கின்றனர். மேலும், மாணவிகளுக்கு என கழிப்பறை இல்லாததால் வீட்டிற்கும், பல மாணவிகள் கொரோனா காலத்தில் படிக்க வந்தவர்கள் டி.சி வாங்கி கொண்டு பழைய பள்ளிகளுக்கு சென்று விட்டதாகவும் தெரியவந்துள்ளது. எனவே, பள்ளியில் போர்க்கால அடிப்படையில் 20 மாணவர்களுக்கு ஓர் கழிப்பறை கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!