Tamil Nadu Chief Minister M. K. Stalin inaugurated a Rs 1.15 crore library and intellectual center at Perambalur.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர் நகராட்சியில் “கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்” கீழ் ரூ 1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் கற்பகம், எம்.எம்,ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி. ராஜேந்திரன், சார் ஆட்சியர் கோகுல், நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தினை பார்வையிட்டனர்.
பெரம்பலூர் நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாகும். 21 வார்டுகளாக உள்ளடக்கியதாக உள்ள பெரம்பலூர் நகராட்சி 20.59 சதுர கி.மி பரப்பளவு கொண்டதாகவும், 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை சுமார் 50 ஆயிரம் ஆகும்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் ஆர்வமுள்ள மாணவ சமுதாயத்தின் அறிவினை வளப்படுத்த அவர்கள் வாழ்வில் உயர வழி வகுக்கின்றது. போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்று உயர்தர நிலை அடைய உதவுகிறது. அறிவுசார் படிப்பகம் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி வகுப்புகள், மின் கற்றல் தளங்கள் ஆகிய வகதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத்தில், தற்போது 2,287 என்ணிக்கையிலான புத்தகங்கள் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. 6 எண்ணிக்கையில் கணிணிகள் வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஸ்மார்க் வகுப்புகள் எடுக்கும் வகையில் இணையதள வசதியுடன் அதிநவீன தொடுதிரை, குழந்தைகள் அமர்ந்து படிக்கும் வகையிலான பிரத்யேக இருக்கை மற்றும் மேசைகளும் இந்த அறிவுசார்மையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் ராமர், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாத்துரை மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.