Tamil Nadu Chief Minister On the occasion of M.K. Stalin’s birthday, Perambalur DMK dragged the golden chariot and Annadhanam gave it.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் ஒன்றிய திமுக சார்பில், தங்க தேர் இழுத்து வழிபட்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் (மார்ச் 1) பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் ஒன்றிய திமுகவினர் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மனை வழிபட்டு கோயில் உள் பிரகாரத்தில் தங்க தேர் இழுத்து பிரார்த்தனை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில், பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ. கலியபெருமாள் முன்னிலையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ., ம. பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏவும், பெரம்பலூர் ஒன்றிய செயலாளருமான ம. ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் சிறுவாச்சூரை சேர்ந்த அழகேசன், வக்கீல் செல்லையா உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.