Tamil Nadu Chief Minister’s Breakfast Program: Minister Sivashankar inaugurated it in Lappaigudikkad!
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் இன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலுார் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட லப்பைகுடிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை இன்று கலெக்டர் கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்தார்.
இதில், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, லப்பைகுடிகாடு பேரூராட்சி தலைவர் ஜாகிர்உசேன், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவர் முத்துலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கருணாநிதி, மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.