Tamil Nadu Construction workers may apply for children enrolled in private schools.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர்: தமிழக அரசின் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று 5ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் பதிவு பெற்ற தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளை முறையே 6ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு கல்வியை அப்பகுதியில் உள்ள நன்மதிப்புள்ள தனியார் பள்ளிகளில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியின் மூலம் (2018 – 2019) கல்வி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களில் தகுதி மற்றும் விருப்பம் உள்ள தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை இத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் சேர்த்து பயன்பெறலாம்.
மேலும், இதுகுறித்த விவரங்களுக்கு மாவட்ட தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), எளம்பலூர் சாலை, பெரம்பலூர் என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரிலும், 04328-277822 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.