Tamil Nadu Farmers’ Association decides to hold a protest demanding to buy small onions for Rs. 30 per kg!

சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் 7ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமை பெரம்பலூரில் நடந்தது.

கூட்டத்தில், மத்திய அரசு நுகர்வோர் நலத்துறை மூலம் பெரிய வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் பருவத்தில், கிலோ ரூ.21 க்கு கொள்முதல் செய்துள்ளதுபோல, சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.30 க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தி மார்ச் 7ம்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது,
ஆலை நவீனப்படுத்தப்பட்ட பிறகும், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அடிக்கடி இயந்திரங்கள் பழுது ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பெரம்பலூர் சர்க்கரை ஆலையை பழுதின்றி இயக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை செயல்படுத்த வரும் பட்ஜெட்டில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திட்டம் தொடங்கி 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் கொட்டரை நீர்த்தேக்க திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. இத்திட்டத்தை விரைந்து முழுமையடையச் செய்து விவசாயிகள் பயனடைய செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் செல்ல கரும்பு, துரைராஜ், துரைசாமி ,ஜெயப்பிரகாசம், தங்கவேல், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!