Tamil Nadu government is responsible for the increase in milk, electricity, property and bond registration fees: BJP candidate Parivendar speech!

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் அய்யர்மலை குட்டப்பட்டி நான்கு ரோடு, குளித்தலை நகர் பகுதி பெரிய பாலம், மருதூர் பேரூராட்சி பகுதி பணிக்கம்பட்டி, இணங்கூர், நங்கவரம் பேரூராட்சி பகுதி கீழ் நகரம், ஆகிய பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவர் பேசியதாவது; வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தாமரைக்கு எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
காரணம் இன்று பால் விலையில் தொடங்கி, மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி, பத்திரப்பதிவு உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டு விட்டது. விலை வாசியும் உயர்ந்து விட்டது.

இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாடு அரசு தான். ஆனால் இவர்கள் சொல்வார்கள் இருக்கலாம் காரணம் மோடி அரசு என்று. இது ஏமாற்று வேலை.
ரேஷன் கடைகளில் வழங்குகிற ஒரு கிலோ அரிசியின் மொத்த விலை ரூபாய் 34. இதனை உங்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள். இதில் மோடி அரசு ரூபாய் 32 ஐ கொடுக்கிறது. ஆனால் தமிழக அரசு ரூபாய் 2 ஐ மட்டும் கொடுக்கிறது.

ஆனால் என்ன சொல்வார்கள் நாங்கள் தருகிறோம் என்று. மோடி தலைமையிலான ஆட்சி ஊழலற்ற ஆட்சி. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 12 ஆயிரம் வழங்குகிற ஆட்சி மோடி ஆட்சி.

விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற உரம் அதிக விலைக்கு வாங்கி அவற்றை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு தருகிற அரசு மோடி அரசு தானே தவிர, தமிழ்நாடு அரசு அல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னை தேர்வு செய்தீர்கள். இப்போது இரண்டாவது முறையாக உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன். இரண்டாவது முறையாக தொகுதிக்குள் வருவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். உங்களுக்கு சேவை செய்தால் மட்டுமே உள்ளே வர முடியும்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முறையாக செய்து உள்ளேன்.
பாராளுமன்றத்தில் எத்தனை முறை பேசினேன் எத்தனை முறை பிரதமரை சந்தித்தேன் மத்திய அமைச்சர்களை சந்தித்தேன் என்பதை எல்லாம் புத்தகமாக வெளியிட்டுள்ளேன். அதனை படித்தாலே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் செய்த சாதனைகளை புத்தகமாக வெளியிட்ட ஒரே பாராளுமன்ற உறுப்பினர் நானாகத்தான் இருக்க முடியும். கடந்த முறை நான் வாக்குறுதி கொடுத்தேன் அது என்ன வாக்குறுதி என்றால் தொகுதியில் 1200 ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி கொடுப்பேன் என்று சொல்லி இருந்தேன்.

அதுபோலவே ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி கொடுத்துள்ளேன். இதன் மூலம் எனக்கு செலவு ரூபாய் 118 கோடி. இது போன்ற சொந்த பணத்தில் வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரும் செய்ததில்லை. இந்த வருடத்தில் வாக்குறுதி ஒன்றை கொடுக்கிறேன்.

அது என்ன வாக்குறுதி என்றால் தொகுதியில் 1500 ஏழை குடும்பங்களைச் சேர்ந்த வீட்டில் ஒருவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை உயர் மருத்துவ சிகிச்சை என்றால் என்ன ஹார்ட் ஆபரேஷன் மூட்டு ஆபரேஷன் இது போன்ற ரூபாய் 10 லட்சம் செலவிலான மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக அவர்களுக்கு வழங்க உள்ளேன்.

இது எனது இந்த ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது தொகுதி வளர்ச்சி நிதி ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி கொடுப்பார்கள். கொரோனா காலம் போக ரூபாய் 17 கோடி கொடுத்தார்கள். அவற்றை மக்களுக்கு பள்ளி வகுப்பறை கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கழிவறைகள் என மக்கள் அடிப்படை தேவைகளுக்காக செலவிட்டு உள்ளேன். எனவே, மத்தியில் ஊழலற்ற ஆட்சி மோடி தலைமையில் மீண்டும் அமைய எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

பிரச்சாரத்தின் போது தொகுதி பொறுப்பாளர் நெல்லை ஜீவா, ஐஜேகே மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், மாவட்டத் தலைவர் பிரசாத் கண்ணா, மாவட்ட செயலாளர் தோகைமலை பிச்சை, குளித்தலை நகர தலைவர் மணிகண்டன், குளித்தலை நகர பிஜேபி செயலாளர் கே.எஸ். கணேசன், குளித்தலை ஒன்றிய பிஜேபி தலைவர் ரஞ்சித் குமார், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஐஜேகே நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!