Tamil Nadu Government’s Uttam Gandhi Award for Well-Performed Village Panchayats: Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ளள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக முதலமைச்சரின் சட்டமன்ற பேரவை விதி எண்.110-இன்கீழ் 2022-ஆம் ஆண்டு முதல் சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிடும் வகையில், சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022-ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம ஊராட்சி தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக்கொணரும் வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், இவ்வாண்டு முதல் மீண்டும் உத்தமர் காந்தி விருது மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சம் வீதம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு தமிழக முதலமைச்சரால் உத்தமர் காந்தி விருது வழங்கி கவுரவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி விருதுக்கான விண்ணப்பங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வெளியிடப்படும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட தெரிவித்துள்ளார்.
விளம்பரம்: