Tamil Nadu Legislature Public Accounts Committee inspection in Perambalur! Request to remove the cage in Periyar statue !!

பெரம்பலூருக்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு சட்ட மன்ற பொதுக்கணக்கு குழு, அதன் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தலைமையில், பண்ருட்டி எம்.எல்.ஏ தி.வேல்முருகன் , காட்டுமன்னார் கோயில் எம்.எல்.ஏ ம. சிந்தனைச்செல்வன், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி, ஆகியோர் அடங்கிய குழு பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையத்தில் இலங்கை அகதிகளுக்கு கட்டப்பட்டு வரும் முகாம் குடியிருப்புகளையும், எளம்பலூர் சமத்துவபுரத்தில் சீரமைக்ப்பட்ட வீடுகளையும், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ ஸ்கேன், அரசு மதிப்புமிக்க நிலங்களை வேலியிட்டு பாதுகாப்பதையும், அம்மோனைட்ஸ் மையத்தையும், பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மையம் வழங்கப்படும் மனுக்களின் மீது, நடவடிக்கை எடுக்கும் விதம், ஆகியவற்றையும், அரசு பிற்படுத்தபட்டடேர் நல பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்போது, கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், கவுல்பாளையம் தலைவர் கலைச்செல்வன் மற்றும் வருவாய், ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், உடனிருந்தனர்.

எளம்பலூர் பெரியார் சமத்துவபுரத்தில், தமிழ் நாடு சட்ட மன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு செய்தனர். வீட்டின் உள்ளே தி. வேல்முருகன் எம்.எல்.ஏ நுழைந்து பார்த்தார். பின்னர் அங்கிருந்த பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும்: சமத்துவபுரத்தில் மேலும், புணரமைக்க நிதி வழங்காத 5 வீடுகளுக்கு நிதியுதவி வழங்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதை கண்ட எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன், பெரியார் சமத்துவபுரத்திலாவது சுகந்தரமாக இருக்கட்டும், மதியத்திற்குள் கூண்டை எடுத்து விட பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்தார். முன்னதாக, இலங்கை அகாதிகள் முகாம் குடியிருப்பில் பேசிய சட்ட மன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் கட்டுமான அதிகாரிகளிடம் தரைமட்டத்தில் இருந்து குடியிருப்பு பகுதி 2 அடி உயரத்தில் உள்ளதை நீரூபிக்க கோரினார். அதிகாரிகள் முழித்ததால், மதியம் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் ஆதாரங்களுடன் வந்து விளக்குமாறு தெரிவித்தார். பெரம்பலூர் மருத்துவமனையில் பொதுமக்கள் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் போதுமான முக்கிய மருந்துகள் இல்லை என தெரிவித்தனர். தலைவர் செல்வப்பெருந்தகை அங்கு மருத்துவக்கல்லூரி எப்போது வரும், அரசு மருத்துவமனைக்கு ஜே.டி நியமனம் செல்போனில் அமைச்சர் மற்றும் துறை ரீதியானவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!