Tamil Nadu Pharma Traders Association State Working Committee meeting demanding to fix the price of drugs according to law!

தமிழ்நாடு மருந்து வியபாரிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் மாநில தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. மூத்த தலைவர் மகேந்திரன், மாநில பொது செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் திருலோகசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாநில தலைவரும், நிர்வாக செயலாளருமான ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசியதாவது: மருந்துகள் 3 வகையாக பிரிக்கப்பட்டு முறையே மருத்துவர்கள் பரிந்துரைக்கு மட்டும் விற்பனை செய்பவை, மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்தாளுனர்கள் நோயாளிகளின் விவரம் அறிந்து பக்க விளைவுகளை எடுத்துச்சொல்லி விற்பனை செய்யக்கூடியவை, உபாதை உள்ளவர்களே நேரிடையாக எந்த பரிந்துரையும் இன்றி வாங்கி உபயோகிக்க கூடியவை என்றும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

இதற்கான பட்டியலை பல்வேறு மேலைநாடுகளில் பின்பற்றப்படும் வழிமுறைகளை கொண்டும் நிர்ணயிக்கலாம். எந்த ஒரு மருந்தும் அதற்கென உரிமம் பெற்ற நிறுவனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் சீதோஷன நிலை பராமரிப்பு, மருந்தாளுனர் ஆலோசனை, தரக்கட்டுப்பாடு ஆகியவை கண்காணிக்க இயலும் மருந்து வணிக அனுபவம் அற்ற மருந்து வணிக உரிமம் அற்றவர்கள் – மூலம் சில்லரையாகவோ மொத்தமாகவோ விற்பனை செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும், இதற்கு அரசு ஆவணம் செய்யவேண்டும்.

மருந்துகளின் எம்ஆர்பி விலையை பன்மடங்காக உயர்த்தி அதன் விலையிலிருந்து 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி செய்து விற்கும் மருந்து நிறுவனங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம். டாக்டர்கள் எழுதி தரும் பிராண்டேட் மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி உடல் நலத்தை பேணவேண்டும் என பொதுமக்களுக்கு எடுத்துக்கூறவேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பேசினர்.

கூட்டத்தில் ஓடிசி மருந்துகளை வகைப்படுத்தி அறிவிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் வணிகர்களின் பிரதிநிதியாக அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் சேர்க்கப்பட வேண்டும். மருந்துகளின் கலவை இவை என அச்சிட்டு விற்பனைக்கு வரும் அனைத்து தயாரிப்புகளும் மருந்துகள் தயாரிப்புக்கான உரிமம் பெற்றே தயாரிக்கப்பட வேண்டும். உணவுபாதுகாப்பு சட்டத்தின் பதிவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களும் அதன் தயாரிப்பில் என்ன மூலக்கூறுகள் பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பதை அதன் அளவுகளை மாநில மொழிகளில் அச்சிட்டு விற்பனை செய்ய வேண்டும்.

இந்திய அரசின் மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் மருந்துகள் விலை கட்டுபாடு சட்டத்தின் மூலம் மருந்துகள் விலையினை குறைத்து ஆணையிட வேண்டும். ஒரு மருந்து முழுமையாக தயாரிக்க ஆகும் செலவு மற்றும் அதனை பயனாளிகளுக்கு பரிந்துரைக்க கொண்டு சேர்க்க ஆகும் செலவுகளையும் கணக்கிட்டு விற்பனை விலை நிர்ணயிக்க வேண்டும்.

மருந்துகள் தயாரிக்கப்பட்ட விரீயத்துடன் பயனாளிகளுக்கு சென்றடைய மருந்து வணிக நிறுவனங்கள் வெப்ப சீதோஷ்ண நிலையை பாதுகாக்க பல குளிரூட்டிகளை பயன்படுத்த வேண்டி உள்ளது. ஆகையால் மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு மின்சாரத்தை வீட்டு உபயோக மின்சார விலைக்கு அளித்து உதவிடவேண்டும். சில்லரை மருந்து விற்பனை உரிமங்கள் தேவைக்கு அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நகர்புரங்களில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒன்று என்ற வகையிலும் மற்ற பகுதிகளில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு ஒன்று என்ற முறையில் சில்லரை மருந்து விற்பனை நிறுவனத்திற்கு உரிமங்கள் வழங்கப்பட வேண்டும்

மின்அஞ்சல் இன்டெர்நெட் (ஆன்லையன்) மூலம் மருந்துகள் விற்பனை செய்வது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். போலி மருந்துகள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் ஆய்வகங்கள் ஏற்படுத்தி பொதுமக்களும் தாங்கள் வாங்கி உபயோகிக்கும் மருந்துகளின் தரத்தினை அறிய வசதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க கல்வி அறக்கட்டளை நடத்திடும் சி எல் பெய்டு மேதா பார்மஸி கல்லூரியில் சங்க உறுப்பினர்கள் குடும்பத்தார் மருந்தாளுனர் பட்டயக்கல்வி இலவசமாக பெற 50 இடங்கள் ஒதுக்கிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இணை செயலாளர் கே. சரவணன் நன்றி கூறினார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து அச்சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!