Model

Tamil Nadu Pongal gift package: The MP, MLAs have been started in Perambalur

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

தமிழக மக்கள் அனைவரும் தமிழா; திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சிறப்பு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கமும் வழங்கிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 282 நியாயவிலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 1,74,684 மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் சிறப்பு பொங்கல் பரிசு 1000 ரொக்கமும் வழங்கப்படும்.

மேற்படி பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் துறைமங்கலம் 1,2 மற்றும் 3 நியாயவிலை அங்காடிகளில் நாளை காலை 10.00 மணியளவில் தொடங்கி வைக்க உள்ளனர்.

இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு 07.01.2019 முதல் 13.01.2019 முடிய அனைத்து நியாய விலைக்கடைகளிலும் காலை 8.30 முதல் 12.30 முடிய பிற்பகல் 1.30 முதல் 5.30 முடிய தொடர்ந்து வழங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடைகளில் மின்னணு குடும்ப அட்டையுடன் குடும்ப அட்டைதாரரோ அல்லது அந்த குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள யாரேனும் ஒருவரோ சென்று தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

இப்பணியை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இது குறித்து புகார்கள், குறைபாடுகள் இருப்பின் அவற்றை பெரம்பலூர் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலரை 9445000270 என்ற எண்ணிலும், பெரம்பலூர் வட்ட வழங்கல் அலுவலரை 9445000271என்ற எண்ணிலும்,
வேப்பந்தட்டை வட்டத்திற்கு தனிதுணை ஆட்சியர் (ச.பா.தி)- 9445461745 என்ற எண்ணிலும், வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலரை 9445000272 என்ற எண்ணிலும்,
குன்னம் வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரை- 9442149101 என்ற எண்ணிற்கும், குன்னம் வட்ட வழங்கல் அலுவலரை 9445000273 என்ற எண்ணிற்கும்,

ஆலத்தூர் வட்டத்திற்கு துணைப்பதிவாளர் (பொ.வி.தி) 7338720218 என்ற எண்ணிற்கும், ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலரை 9842622455 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நியமனம் செய்துள்ள அலுவலருக்கு 9445476298 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!