Tamil Nadu Yadava Mahasabha Family Festival at Perambalur: Scholarships- 3 thousand coconut saplings awarded!
பெரம்பலூரில் தமிழ்நாடு யாதவ மகாசபை, பெரம்பலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் யாதவர்களின் குடும்ப விழா பெரம்பலூர் மாவட்ட தலைவரும், ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான என். முத்தையா தலைமையில் துறைமங்கலத்தில் நடந்தது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாளின் ஆன்மீக பிரசங்கம், கிருஷ்ணரின் மேன்மையை கூறும் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் மாநில தலைவரும், அமேட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் சரஸ்வதி மருத்துவக்கல்லூரிகளின் நிறுவனத் தலைவருமான டாக்டர் நாசே. ராமச்சந்திரன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு, 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெரம்பலூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற யாதவ குல மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே தலா ரூ.50ஆயிரம், ரூ.25ஆயிரம், ரூ.10ஆயிரம் என ரொக்க பரிசுகளையும், சிறந்த மதிப்பெண் பெற்ற 120-பேர்களுக்கு தலா ரூ2ஆயிரம் கல்வி உதவித்தொகைளையும், எசனை, அன்னமங்கலம் யாதவ திருமண மண்டபங்களை புணரமைக்க தலா ரூ.50ஆயிரம் நிதிஉதவிகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவிற்கு மாவட்ட அவைத்த லைவரும், செட்டிகுளம் லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான தமிழ்வாணன், பண்பாட்டுக் கழக செயலாளரும், மகாத்மா பப்ளிக் பள்ளியின் பொறுப்பாளருமான ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.
விழாவில் மாநில பொதுச்செயலாளர் வேல்.மனோகரன், பொருளாளர் எத்திராஜ், மாநில மூத்த தலைவர் கொம்புதி செல்வராஜ் மற்றும் மாநில மகளிரணி செயலாளர், டாக்டர் முத்துலட்சுமி, இளைஞரணி செயலாளர் பொட்டல்.துரை, சட்ட ஆலோசகர் சபாபதி, மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, கடலூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் யாதவமகாசபையின் பணிகள், செயல்பாடுகள், சேவைகள் குறித்தும், மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து குன்னம் சட்டமன்ற பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் ஒன்றிய நிர்வாகிகள் திருவள்ளுவர், சிறுநிலா விஜயா(மகளிரணி) ஆகியோர் மாவட்ட,ஒன்றியஅமைப்புகளின் பணிகள் குறித்தும் கருத்துரை ஆற்றினார்கள்.
முக்கிய பிரமுகர்களுக்கு மாவட்ட பொருளாளர் ராமர் பொன்னாடை அணிவித்தார். விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் இருந்து திரளான யாதவ மகாசபை தொண்டர்களும், தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் என திரளான பேர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து மோட்டார்சைக்கிள், கார், வேன்களில் மேளதாளம் முழங்க யாதவர்களின் பண்பாட்டு ஊர்வலம் தொடங்கி, கடைவீதி, பழையபேருந்துநிலையம் உள்ளிட்ட பிரதான சாலைகள் வழியாக சென்று விழா நடந்த மண்டபத்தை அடைந்தது. இதில் மாநில தலைவர் ராமச்சந்திரன் யாதவிற்கு சிறப்பான வரவேற்பும், பிரம்மபுரீஸ்வரர் மதனகோபாலசுவாமி மற்றும் ஸ்ரீபாலமுருகன் கோவில்கள் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. நகரத்தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.