Tamil New Year, thousands of devotees of Swami darshan
தமிழ் புத்தாண்டு : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு தீபாராதனை, அபிஷேகங்கள் நடைபெற்றது.
மேலும், சித்திரை விசுவை முன்னிட்டு காலை 10 மணிக்கு அபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், மற்ற காலை பூஜைளும் நடந்தது.
தமிழ் புத்தாண்டு தினத்தையட்டி அதிகாலை முதலே பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்களில் இன்று காலை முதல் மாலை வரை பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக சென்று தங்கள் விருபத்திற்குரிய கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். பலர் அன்னதானம் வஸ்திரதானம் போன்றவற்றை வழங்கி ஏழைகளுக்கு உதவினர்.