Tamil Women devotees accompanied by Kerala Police team back to Sabarimala

hபெண்கள் சபரிமலைக்குள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஆண்களை கேரளா போலீசார் கைது செய்தனர். தற்போது பெண் பக்தர்கள் மீண்டும் சபரிமலை நோக்கி போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் போராடி வருகின்றனர். சபரிமலைக்கு வரும் பெண்களை அவர்கள் தடுத்தும் நிறுத்துகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்ல விரும்பும் பெண்களை ஒருங்கிணைத்து மனிதி என்ற அமைப்பு சபரிமலை கோயிலுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தது, அதன்படி சென்னையை சேர்ந்த 11 பெண்கள் பம்பை அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் ஐயப்ப பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆனால் ஐயப்பனை தரிசனம் செய்யாமல் நாங்கள் திரும்ப மாட்டோம் என மனிதி அமைப்பை சேர்ந்த பெண்கள் உறுதியாக இருக்கின்றனர். முன்னதாக சபரிமலைக்கு வருவதையொட்டி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு மனிதி அமைப்பினர் கடிதம் எழுதியிருந்தனர். எனினும், சபரிமலைக்குள் பெண்கள் செல்ல போராட்டத்தில் ஈடுபட்ட ஆண் பக்தர்களை கைது செய்த போலீசார், பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்களை பாதுகாப்புடன் சபரிமலைக்கு கூட்டிச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.