Tamilnadu State AMMA Youth Sports Competition Launches at Chettikulam near Perambalur

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை துவக்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து பெரம்பலூர; மாவட்டம் செட்டிக்குளத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகளை பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் கலெக்டர் வே.சாந்தா தொடங்கி வைத்து இளைஞர்களுக்கு வீரர், வீராங்கனைகளுக்கு விளையாடத் தேவையான கம்பங்கள், வலைகள், கிரிக்கெட் மட்டைகள், பந்துகள், கையுறைகள், முதலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

அதன்படி அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தனித்தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கபட்டு, கபடி, வாலிபால் மற்றும் கிரிக்கெட் அல்லது பூப்பந்து அல்லது இதர விளையாட்டுகள், இவற்றில் ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு ஆடுகளங்கள் அமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைத்தல் மற்றும் விளையாட்டு போட்டிகளை ஊராட்சி ஒன்றிய, மாவட்ட , மாநில அளவில் நடத்துதல், போன்ற இனங்கள் செயல்படுத்தப்படும். இளைஞர்களிடையே தலைமைப் பண்பினை வளர்த்தல், கிராம இளைஞர்களிடம் கூட்டு மனப்பான்மையினை உருவாக்குதல், கிராமங்களில் உள்ள விளையாட்டுத் திறன்மிக்க இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து அவர்களை உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க வைத்தல் போன்றவை இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா பேசியதாவது:

கிராமப்புறங்களில் பாரம்பரியமான விளையாட்டுக்களை மீட்கும் வகையிலும், கிராமபுற இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையிலும் தமிழக முதலமைச்சரால் அம்மா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஆணையிடப்பட்டு, அதனடிப்படையில் இன்று முதல் இளைஞர்களிடையே கிரிக்கெட், கபடி மற்றும் வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இத்தகைய நடவடிக்கைகளால் பெரம்பலூர் மாவட்டம் விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதிகளில் பயின்றுவரும் மாணவிகள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு பதக்கங்களை பெற்று பெரம்பலூர; மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

மேலும் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்களிடையே தலைமைப் பண்பினை வளர்த்தல், கிராம இளைஞர்களிடம் கூட்டு மனப்பான்மையினை உருவாக்குதல் உள்ளிட்ட நற்பண்புகள் உருவாகின்றன. எனவே இளைஞர;கள் அனைவரும் தங்கள் உடல்நலனில் ஆரோக்கியம் செலுத்துவதற்கும் நற்பண்புகளை வளர;த்துக்கொள்வதற்கும் தங்களுக்கு பிடித்தமான விளையாட்டுப்போட்டிகளில் ஆர்வம் செலுத்த வேண்டும், என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திட்டஇயக்குநர் தெய்வநாயகி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும் ஆலத்தூர் ஒன்றிய செயலாளருமான என்.கே. கர்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) ஜெயகுமாரி, ஆலத்தூர் வட்டாட்சியர் ஷாஜஹான், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, , செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு, கைப்பந்து பயிற்றுநர் வாசுதேவன், டேக்வாண்டோ பயிற்றுநர் தர்மராஜன், செட்டிக்குளம் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!