பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் இன்று தனது கட்சியினருடன் வாக்குகளை சேகரித்த வேட்பாளர் தமிழ்ச்செல்வன் பேசியதாவது;
கல் உடைக்கும் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் நிறைந்த எசனை கிராமம் அதிமுகவின் எஃகு கோட்டை. எசனை கீழக்கரை கிராம மக்கள் நீண்ட மருத்துவ சிகிச்சை பெற 20 கி.மீ தொலைவில் கல்பாடி கிராமத்திற்கு சென்று வர வேண்டும். இந்த சிரமத்தை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க தற்போது எசனை கிராமத்திலேயே ரூ.50 லட்சம் மதிப்பபில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.75 மதிப்பில் அடுக்குமாடி கட்டிடம், 40 லட்சம் மதிப்பில் கால்நடை மருத்துவமனை சுற்றுச் சுவர், ரூ.3 லட்சம் மதிப்பில் பால் பண்ணை சுற்றுச் சுவர், ரூ. 1 கோடி மதிப்பபில் 5 குடி நீர் கிணறுகள் வெட்டியதுடன், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தது, ரூ. 20 லட்சம் மதிப்பில் அரசு பயிற்சி கூடம், 2 கோடி மதிப்பில் மின் அழுத்த கோபுரம், ரூ.60 லட்சம் மதிப்பில் 4 அங்கன்வாடி கட்டிடம், கீழக்கரையில் பயிற்சி கூடம், ஆதிதிராவிடர் பள்ளிக்கு சுற்றுச் சுவர் மற்றும் புதிய சமையல்கூடம், பாப்பாங்கரையில் பசுமை திட்டத்தில் இடுகாடு, பாப்பாங்கரைக்கு தார்சாலை , கீழக்கரைக்கு தார்சாலை, 8 போர்வெல் டேங் அமைத்தது 10 புதிய கைபம்புகள் அமைத்து கொடுத்தது, சிவன் கோவில் பராமரிப்பு, அம்சா கோவிலுக்க தார் சாலை, நிலமில்லாத ஏழை மக்கள் 100 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, 150 பேருக்கு இலவச ஆடுகள், மதவானை அம்மன் கோவலிலுக்கு தார் சாலை , கீழக்கரையில் இருந்து கீழக்கரை ஏரிவரை தார் சாலை, எசனை, கீழக்கரை கிராமங்களுக்கு 90 பசுமை வீடுகள் என ரூ. 5.5 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் அம்மா ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது.
எசனையின் அடிப்படை வசதிகளில் கொடுத்த வாக்குறுதியில் 90 சதவீதம் நிறைவேற்றி உள்ளோம். மீதம் 8 அல்லது 10 சதவீத தனிப்பட்ட கோரிக்கைகள் தான் மிச்சம் உள்ளது. அதனையும் 100 சதவீதமாக நிறைவேற்றிடவும், எனவே மீண்டும் அம்மா 6வது முறையாக முதலமைச்சராக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, வெற்றி அடைய செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் பொதுமக்கள் வைத் கோரிக்கையாக இருக்கும் நியாய விலைக் கடையை இரண்டாக பிரித்து கூடுதலாக பகுதி நேர ரேசன் கடை அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதுவும், வெற்றி பெற்ற 6 மாத காலத்திற்குள் சிறப்பு கவனமாக நிறைவேற்றித் தரப்படும் என்ற உறுதி தந்து, வாக்களியுங்கள், அம்மாவை முதலைமைச்ராக்க எளிய தொண்டன் என்னை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என பேசினார்.
முன்னதாக காட்டு மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு வாக்கு சேகரிப்பை துவங்கிய அவருக்கு சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர், ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டனர். வானவெடிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீதி வீதியாக நடந்து சென்றே தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தார். ஆங்காங்கே தொண்டர்கள் தெருவிற்கு தெரு வெடிவெடித்தும், மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் பொன்னாடை போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் எசனையை சேர்ந்த அதிக பிரமுகர்கள், கீழக்கரை பன்னீர்செல்வம், நல்லரத்தினம், முல்லைவேந்தன் உள்ளிட்ட ஒன்றிய, பேரூர், மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.