பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் திரைப்பட நடிகர் தியாகு , அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.
பெரம்பலூர் காந்தி சிலை முன்பு இன்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையானதை முதலமைச்சர் செய்து கொடுத்துள்ளர். எனவே, மீண்டும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பின்னர், அதிமுக வேட்பாளர் தமிழ்சலல்வனை ஆதரித்து சங்குப்பேட்டை, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் தொடர்ந்து வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.