Tanker truck accident near the Perambalur: the river-running diesel, civilians were caught in pots.
சென்னையிலிருந்து டீசல் ஏற்றி கொண்டு விருதுநகர் நோக்கி சென்ற டேங்கர் லாரி ஒன்று, பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில் கார் ஒன்று குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, இணைப்பு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
டேங்கர் லாரியை ஓட்டி வந்த விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சரசம்பட்டியை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர், அகிலன் மற்றும் கிளினர் அறிவழகன் ஆகிய இருவரும் படுகாயத்துடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
24 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டி சேதமடைந்தது, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
முன்னதாக அதைக் கண்ட அப்பகுதி மக்கள் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய டீசலை அண்ணா குண்டா, குடம் மற்றும் பக்கெட்டுகளில் பிடித்து சென்றனர்.