TB awareness seminar co-op workers in Namakkal
நாமக்கல்லில் கூட்டுறவு பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட காசநோய் மையம் சார்பில் கூட்டுறவு பணியாளர்களுக்கான காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நலக்கல்வியாளர் பிலவேந்திரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.
இதில் நாமக்கல் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் டாக்டர் கணபதி பங்கேற்று காசநோய் ஏற்படும் விதம், கண்டறியும் முறை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளித்தார்.
இதில் கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை சிஎஸ்ஆர் நிர்மலா, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சீனிவாசன், கார்த்திகேயன், ஜெய்சுதா, வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்.