TB detection apparatus of the modern Government Hospital In Perambalur

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நவீன காசநோய் கண்டுபிடிக்கும் எந்திரம் :

TB-detection-mechine

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அதி நவீன காசநோய் கண்டுபிடிக்கும் CBNAAT ஆய்வகம் (Gene xpert) திறப்பு விழா மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய் பிரிவில் காசநோயை கண்டறியும் வகையில் ரூபாய் 20 லட்சம் செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள CBNAAT எனும் அதிநவீன காசநோய் கண்டு பிடிக்கும் கருவியை சுகாதாரத்துறை இணை இயக்குநர் வானொலி துவக்கி வைத்தார்.

பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஆண்டிற்கு 1400 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். காசநோயை கண்டறிய ஊடீNயுயுவு என்கிற அதிநவீன கருவி தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே இருக்கிறது. இக்கருவி மூலம் காசநோய் கிருமியை கண்டறிவதுடன், அது கூட்டு மருந்துக்கு கட்டுப்படுமா என்பதையும் துல்லியமாக கண்டறிய முடியும்.

இந்த அதிநவீன கருவி தற்போது பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கூட்டு மருந்துக்கு கட்டுப்படாத காசநோயின் தன்மையை கண்டறிய சளி மாத்திரைகளை சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள காசநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது அந்த பரிசோதனையை பெரம்பலூர் மாவட்ட காசநோய் பிரிவிலேயே செய்து கொள்ளலாம். இக்கருவி மூலம் காசநோய் கிருமி உள்ளதா எனவும், அது கூட்டு மருந்துக்கு கட்டுப்படுமா என்பதையும் துல்லியமாக 2 மணி நேரத்திலேயே கண்டுபிடித்து விட முடியும் என்பது இக்கருவியின் சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.சசிகலா, இருக்கை மருத்துவ அதிகாரி மரு.ராஜா, காசநோய் மருத்துவர் மரு.சிவா, மாவட்ட காசநோய் ஒருங்கிணைப்பாளர் புரட்சிதாசன், மாவட்ட வீரிய காசநோய் ஒருங்கிணைப்பாளர் அழகேசன் மற்றும் காசநோய் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!