Teacher Training Institute students, the teachers involved in the protest staged in exchange for a lesson today!

பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில், போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் எண்ணிக்கை போக, பற்றாக்குறை ஆசிரியர்களுக்கு இணையாக ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் இன்று மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்தினர்.
அரசு போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ – ஜியோ அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. அதனால் அரசு பள்ளியை நம்பி பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், இன்னும் சில நாட்களில் தேர்வுகளும் வர உள்ளது. அதனால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் இன்று வகுப்புகளுக்கு சென்று பாடம் நடத்தினர்.
மேலும், தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள் என தெரிகிறது. தமிழ்நாடு அரசு சார்பில், சுமார் 1.லட்சத்து 70 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.