Teachers must develop skills to overcome social changes: Professor Umadevi
தஞ்சாவூர் பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் 6வது ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வணிகவியல் துறை சார்பில் கல்லூரி முதல்வர் விக்டோரியா தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பெங்களூர் சிட்டி பல்கலைக்கழக பேராசிரியர் உமாதேவி பேசுகையில் நாள்தோறும் அறிவியல் மட்டுமின்றி சமூக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அதற்கேற்ப ஆசிரியர்கள் நாள்தோறும் தங்களை மீட்டுருவாக்கம் செய்யவும் திறன்களை வளர்க்கும் முறைகளை கற்றுக்கொள்வதுடன் அதற்கான ஆராய்ச்சி வெளியீடுகளையும் வெளிக்கொணர வேண்டும் அப்போதுதான் நாம் கற்றுக்கொடுக்கும் மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்க முடியும் என்றார்.
நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வரும் வணிகவியல் துறைத் தலைவருமான கிறிஸ்டி உள்ளிட்டோர் உரையாற்றினர். தஞ்சை, திருச்சி, மன்னார்குடி உள்பட பல கல்லூரிகளைச் சேர்ந்த 80 பேராசிரியர்கள் மற்றும் 90 கல்வியியல் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். முன்னதாக வணிகவியல் துறை ஹீனாகௌசா வரவேற்றார். உதவிப் பேராசிரியர் பத்மாவதி நன்றி கூறினார்.