Telangana Election Security Task trip Namakka home guards
தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு நாமக்கல்லில் இருந்து ஊர்காவல்படையினர் சென்றனர்.
தெலுங்கான மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முதன் முறையாக தமிழகத்தில் இருந்து ஊர்காவல்படையினர் செல்கிறார்கள்.
இதன் படி நாமக்கல் மாவட்டத்தில் இருந்துஊர்காவல் படை கம்பெனி கமாண்டர்கள் மணிமாறன், ஆறுமுகம்,பழனிசாமி ஆகியோர் தலைமையில் 60 ஊர்க்காவல்படையினர் சென்னை புறப்பட்டு சென்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேர்தல் பணிக்கு செல்லும் 60 ஊர்காவல்படையினரும் சென்னை சென்று பின்னர் அங்கிருந்து தெலுங்கானா செல்கிறார்கள். இவர்கள் வரும் 8ம் தேதி வரை தெலுங்கான மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ஊர்க்காவல் படையினரை நாமக்கல் மாவட்ட ஊர்காவல் படை ஏரியா கமாண்டர் தில்லைக்குமார், டிஎஸ்பி மணிமாறன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.