kalaimalar.com_col_2தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான புகார்களை தொலைபேசி, வாட்ஸ்அப், இ-மெயில், ஆன்ராய்டு அப்ளிகேசன் ஆகிய வழிகளில் தெரிவிக்கலாம் – மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர;தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டு முறையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க விரும்பினால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 18004257031 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 04328-225322 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், வருமான வரித்துறை தொடர்பான புகார்களை மாநில அளவில் தெரிவிக்க 18004256669 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம்.

அதுமட்டுமல்லாது மாநில அளவில் புகார்களை தெரிவிக்க விரும்பினால் தேர்தல் விதிமீறல் குறித்த புகார் தெரிவிக்க, வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள 1950 என்ற எண்ணிற்கும்,

வாட்ஸ்அப் மூலம் தகவல்களை தெரிவிக்க 9444123456 என்ற எண்ணிலும்,

இணைதளம் மூலம் தகவல் தெரிவிக்க www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும்,

இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்க ceo@tn.gov.in என்ற முகவரியிலும்,

மொபைல் அப்ளிகேசன் மூலம் தகவல் தெரிவிக்க உங்கள் மொபைலில் TN elections என்ற அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்தும் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம், என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!