Temple idols damaged again in Siruvachchur near Perambalur: Public, police confused by serial idol breaking incident!
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான ஸ்ரீ பெரியசாமி மலைக்கோவிலில் மீண்டும் 5க்கும் மேற்ப்பட்ட சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உள்ளிட்ட கோவில் பூசாரிகள் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதியும், 8ம் தேதியும், அதனைத்தொடர்ந்து 27ம் தேதியும் சிலைகளை உடைத்து சேதப்படுத்திருக்கிற நிலையில், மீண்டும் தற்போது நான்காவது முறையாக சிலைகள் உடைத்து சேதப்படுத்திருக்கிற சம்பவம் கோவில் பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.