Temple worker commits suicide by drinking poison due to stomach pain near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன் மகன் தண்டபாணி (56), இந்து அறநிலையத்துறையில் செட்டிக்குளத்தில் உள்ள முருகன் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோயில்களில் கணக்குப்பிள்ளையாக இருந்து வந்தார். தண்டபாணிக்கு மனைவி பிரகதாம்பாள், மகன் ஹரிஹரன் உள்ளனர்
வயிற்று வலி காரணமாக இன்று காலை சுமார் 10.40 மணிக்கு பூச்சிக் கொல்லி மருந்தை அருந்திவிட்டார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதுலுதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் அனுப்பி வைத்தனர், செல்லும் வழியிலேயே மதியம் 1.00 மணி அளவில் உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.