Temporary Graduate Teacher Vacancies in Perambalur, Veypur Education Districts!

Model photo
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் வேப்பூர் கல்வி மாவட்டங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிக நியமனம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடவிபரம் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரிடம் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்களது அனைத்து கல்விச் சான்றுகளுடன் 04.07.2022 முதல் 06.07.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் சம்ர்பிக்கப்பட வேண்டும்.
பெரம்பலூர் கல்வி மாவட்டத்தை சார்ந்தவர்கள் deopmb2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், வேப்பூர் கல்வி மாவட்டத்தை சார்ந்தவர்கள்deoveppur2018@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு தகுதியுள்ள நபர் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. பெரம்பலூர் வருவாய் மாவட்டத்தில் காலிப்பணியிடவிபரம் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-04, ஆங்கிலம்-01, கணிதம்-05, அறிவியல்-02, சமூக அறிவியல்-06 என மொத்தம்-18 பணியிடங்கள். முதுகலை ஆசிரியர்கள் கணிதம்-02, பொருளியல்-08, வணிகவியல்– 10 என மொத்தம் -20பணியிடங்கள்.
பட்டதாரி ஆசிரியர்கள் வரையருக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வளராக பணிபுரிந்து வருபவர்கள். இல்லையெனில் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதிதேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
முதுகலை ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள். (இல்லையெனில்) உரிய கல்வித் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி அமைந்துள்ள ஊராட்சி எல்லைக்குள் வசிப்பவர்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.