Textile park project near Padalur should be started immediately; Farmers’ Association Meeting Resolution

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டக்குழு நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் சின்னசாமி வரவேற்றார். மாநில செயலாளர் சாமி நடராஜன் மாநிலக்குழு முடிவுகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை மாவட்ட விவசாயிகள் பிரச்சனை குறித்தும் எதிர்கால போராட்டங்கள் நடத்துவது குறித்து பேசினார்.

பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்திலுள்ள 73 பொதுப்பணித்துறை ஏரிகளில் இதுவரை 3 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளது. மாவட்ட நிர்வாகம் செய்துள்ள குடிமராமத்துப் பணிகளும் பாதியிலேயே நிற்கிறது.

குறிப்பாக வேப்பந்தட்டை வட்டம் கல்லாற்றிலிருந்து வரும் நீர் வரத்துவாய்க்கால் மூலமாக பல ஏரிகளுக்கு செல்கிறது. தற்போது வரத்துவாய்க்கால் அனைத்தும் சீர்செய்யப்படாததால் எந்த ஏரியும் நிரம்பவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளையும் வரத்து வாய்க்கால்களையும் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும், இம்மாவட்டத்தில் மானாவாhpப்பயிh;கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் யூரியா தட்டுப்பாடு குறித்து மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவே நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒரே நேரத்தில் அதிக யூரியா தேவைப்படும், அதற்கு, போதிய இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 2014 ஆம் ஆண்டே திட்டம் ரத்துசெய்யப்பட்ட காரணத்தால் நிலம் கொடுத்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதை ஜிவிகே குழுமம் தடுப்பதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நில ஆவணங்களை ஜிவிகே குழுமத்திலிருந்து விவசாயிகள் பெயருக்கே மாற்றம் செய்ய அரசு உதவி செய்ய வேண்டும்.

வேப்பந்தட்டை தாலுக்கா பச்சைமலை சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டம் ஆய்வுப்பணியோடு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேவையான நிதியை ஒதுக்கி உடனடியாக திட்டத்தை துவக்க வேண்டும் என வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் விவசாயிகளை திரட்டி போரட்டம் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பருத்தி கணிசமாக சாகுபடி செய்யப்படுவதால் பருத்தி விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே ஜவுளி பூங்கா அமைப்பதாக நிலம் கையகப்படுத்தப்பட்டு திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல தமிழகத்திலேயே பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி லிட்டருக்கு 4 ரூபாய் பால் கொள்முதல் விலை உயர்வு கிடைக்க வில்லை இரண்டு ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர். எனவே அரசு அறிவித்தபடி பால் விலைக்ககான 4 ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு 2015-16 மற்றும் 2016 – 17 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்த பாpந்துரை விலை 32 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. மேற்படி தொகையினை உடனடியாக விவசாயிகளுக்கு அரசும் ஆலை நிர்வாகமும் வழங்க வேண்டும், என கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் விநாயகம் கோயிந்தன், ஜெய்சங்கர் சித்தூட்ராமசாமி, கருப்புடையார், பாலசுப்ரமணியன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!