Thai Poosam Festival; Beginning with flagging at Perambalur – Chettikulam Dhandayuthapani Temple

பெரம்பலூர் அருகே செட்டிக்குளம் கிராமத்தில், மிகவும் பிரச்சித்தி பெற்ற காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தண்டபாணி சாமியின் தைப்பூசத்தை முன்னிட்டு தைப்பூச திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, நடப்பாண்டும் தைப்பூசத் திருவிழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி தைப்பூசத்திருவிழா அரியலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி முன்னிலையில் இன்று தை 17ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7ஆம் நாள் வரும் பிப்.6ஆ-ம் தேதி வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சுவாமி திருக்கல்யாண உற்சவமும், இரவு சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவின் 8ஆம் நாளான பிப்.7ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம் குதிரை வாகனம் மற்றும் புஷ்ப பல்லாக்கில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் 9ஆம் நாளான பிப்.8ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.30மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி யும், அதனைத்தொடர்ந்து பிப்.9ந்தேதி திருத்தேர் நிலை வந்து சேருதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 11ஆம் நாள் பிப்.10ந்தேதி பிச்சாண்டவர் புறப்பாடும், கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து 12ஆம் நாள் பிப்.11ந்தேதி மஞ்சள் நீர்,விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைய உள்ளது.

இதனிடையே கொடியேற்ற நாளான இன்று முதல் நாள்தோறும் 12 நாட்களுக்கும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இரவு சுவாமிகள் அலங்கார வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.

மேலும்,பக்தர்கள் வசதிக்காக திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியையொட்டி வரும் பிப்.8ஆம் தேதி பெரம்பலூர், துறையூர், அரியலூர்,ஆலத்தூர்கேட் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கொடியேற்றம் மற்றும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் யுவராஜ், எழுத்தர் தண்டபாணி உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!