Thaipoosam festival: Chettikulam Sri dhandayuthapani temple started with the flag hosting of the day.
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்டம், ஏகாம்பரேஸ்வரர் மற்றும் ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோவிலின் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் செய்யப்பட்டு, விழா தொடங்கியது. வரும் பிப்.3ம் தேதி வரை நடைபெறும் விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக ஜன.29 அன்று சுவாமி திருக்கல்யாண உற்சவமும், ஜன.31 மற்றும். பிப்1 அன்று தைப்பூசத்திருவிழா திருத்தேர் உற்சவம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளது. பெரம்பலூர், துறையூர்,அரியலூர் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.