Thali chain stolen from a woman who went to work near Perambalur!
பெரம்பலூர் அருகே இன்று காலை வேலைக்கு சென்ற பெண்ணிடம், 6 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள தீரன் நகர் பகுதியை சேர்ந்தவர், நமச்சிவாயம் மனைவி நளினா (50), இவர் இன்று காலை சுமார் 8.30 மணி அளவில், கல்பாடி பிரிவு சாலையில் உள்ள பலகார கம்பனியில் வேலைக்கு செல்ல பேருந்திற்காக விஜயராணி என்பவர் வீட்டருகே நின்று பேசிக் இருந்தார். அப்போது அவ்வழியாக எதிர் திசையில், பைக்கில் வந்த இருவர் நளினா அணிந்திருந்த 6 பவுன் தாலிக் கொடியை பறித்து சென்றனர்.
இது குறித்து புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.