Thank you for the Government of Tamil Nadu created by Chinna mudlu Dam, Disaster Response Center: Veppanthattai Union VCK

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம், வேப்பந்தட்டையில உள்ள சமுதாயக் கூடத்தில் ஒன்றியச் செயலாளர் (மே) எ.வெற்றியழகன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் (கி) மா.இடிமுழக்கம் வரவேற்றார். ஒன்றிய பொருளாளர்கள் அ.சண்முகம், அ.பிச்சைப்பிள்ளை உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலாளர் சி.தமிழ்மாணிக்கம், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு.உதயகுமார் வி.தொ.வி.இ மாநில செயலாளர் வீர.செங்கோலன், தொண்டரணி மாநிலத் துணைச் செயலாளர் கராத்தே.பெரியசாமி, வழக்கறிஞர்கள் பேரா.முருகையன் இரா.சீனிவாசராவ், இ.ச.பே மாநில துணைச் செயலாளர் ராசித் அலி, மாவட்ட துணைச் செயலாளர், ந.கிருஷ்ணகுமார், பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதிச் செயலளார் வழக்கறிஞர் ரத்தினவேல், மாவட்ட அமைப்பாளர் து.இனியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில், கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 55 வது பிறந்த நாளை அனைத்து ஊர்களிலும், கல்வெட்டுடன், கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என்றும்,

தமிழக அரசு அறிவித்தப்படி அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ஏரி, குளம், ஓடை, குட்டைகளில உள்ள அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,

வேப்பந்தட்டையில் காவல் நிலையம் அமைக்க வேண்டும், சின்னமுட்லுப் பகுதியில் நீர்த்தேக்கம் அமைப்பதற்கும், வாலிகண்டபுரத்தில் பேரிடர் மீட்பு நிலையம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், நீட் தேர்வை திரும்ப பெற வலியுறுத்தியும்,

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் சாதிய ஆவண படுகொலைகளை தடுக்க சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றவும், மங்களமேடு கிராமத்தில் உள்ள டி.இ.எல்.சி பள்ளியை அகற்றி அரசு நடுநிலைப்பள்ளியை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேப்பந்தட்டை கிளைச் செயலாளர் தா.இளையபெருமாள் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!