Thanks to Chief Minister MK Stalin, Tamil Nadu Agricultural Graduates Teachers Association

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஆசிரியர்களுக்கான நலத்திட்ட அறிவிப்பிற்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின்,
மாநிலத் தலைவர் அக்ரி மு. மாதவன், பொருளாளர் இ.ராமன் மற்றும் தலைமையிடத்து செயலாளர் மு.அன்பரசன் ஆகிய நிர்வாகிகள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து…
நன்றி தெரிவித்தனர்.
வேளாண் அறிவியல் கல்வியை அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் பொதுக் கல்வி திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டியும், . 20 வருடங்களுக்கு மேலாக ஒரே பணி நிலையில் பணியாற்றி வரும் வேளாண்மை தொழில்நுட்ப பட்டதாரி ஆசிரியர்களை முதுநிலை ஆசிரியர்களாக அங்கீகரித்து அறிவிக்க வேண்டியும் மனு கொடுத்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச்செயலாளர், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497