Thanks to MK Stalin for announcing projects worth Rs 172.75 crore: Perambalur district DMK executive committee meeting resolution!
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்! மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது! – தேர்தல் பொறுப்பாளர் மு.இராஜகாந்தம் – எம்.பிரபாகரன்.எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்கள்!
ரூ.172.75 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!
பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன் தலைமையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில், பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி சேர்மனுமான குன்னம் சி.இராஜேந்திரன், நகர,பேரூர் வார்டு தேர்தல் பொறுப்பாளர் மு.ராஜகாந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நகர, பேரூர் உட்கட்சித் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், பாடாலூர் பகுதியில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க ரூ.150 கோடி, வேப்பந்தட்டை ஒன்றியம், எறையூர் சர்க்கரை ஆலை வளர்ச்சி மேம்பாட்டுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு, வேப்பந்தட்டை ஒன்றியம், வெள்ளாற்றை மையமாகக் கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் 15 ஊரக பகுதிகளில் அமைக்க ரூ.11.75 கோடி, கோனேரிப்பாளையம் கிராமத்தில் கோனேரி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை அமைக்க ரூ.4 கோடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரூ.172.75 கோடி மதிப்பீட்டில் அறிவித்த முதலமைச்சரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினுக்கும் , திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.இராசா, போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பரிந்துரை செய்த பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும்,
பெரம்பலூர் ஒன்றியம், திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்தவர், கள்ளக்குறிச்சி மாவட்ட சார் ஆட்சியராக பணி புரிந்த ராஜாமணி என்பவரது மறைவிற்கும், பெரம்பலூர் ஒன்றியம், லாடபும் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் தேன்மொழி மறைவிற்கும், பெரம்பலூர் ஒன்றியம், செங்குனம் முன்னாள் கிளை செயலாளர் பொன்னுசாமி மறைவிற்கும், ,வேப்பூர் வடக்கு ஒன்றியம், நமையூர் கிராமம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சுந்தரவள்ளி லோகநாதன் மாமியார் பார்வதி அம்மாள் மறைவிற்கும், வேப்பூர் தெற்கு ஒன்றியம், பொறுப்புக் குழு உறுப்பினர் காடூர் தர்மராஜ் அவர்களின் தந்தையார், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் காடூர் செல்வராஜ் மறைவிற்கும், பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன் மாமியார் சின்னம்மாள் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ மா.ராஜ்குமார், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பலர் திராளாக கலந்து கொண்டனர்.