Thanthai Periyar Memorial Day; Leaders in Perambalur honored by garlanding!
தந்தை பெரியார் 50-வது நினைவு தினத்தை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் என்.எஸ்.பி சாலையில் உள்ள அவரது சிலைக்கு, திமுக மாவட்டச்செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.ராஜ்குமார், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் மற்றும் சபியுல்லா, மதுபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று பல்வேறு இயக்கத்தினர், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.