The 100th day: train Rs. 5.78 crore robbery: do not get any clues – shortness of CID police

train-robebry

ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், 100 நாட்கள் கடந்தும் எவ்வித துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.

சேலத்தில் இருந்து ஆகஸ்ட் 8ம் தேதி ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான ரூ.342 கோடி பணம் ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. பணம் இருந்த பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் ரூ.5.78 கோடியை கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். துளையிடப்பட்ட ரயில் பெட்டி டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கோவை, ஈரோடு வழியாக சேலம் ஜங்ஷன் வந்தது.

அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் 226 மரப்பலகை பெட்டியில் ரூ.342 கோடி பணம் ஏற்றப்பட்டது. ஓடும் ரயிலில் பெட்டி துளையிடப்பட்டதா? எந்த இடத்தில் வைத்து பணத்தை எடுத்தனர் என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகஸ்ட் 8ம் தேதியில் இருந்து 9ம் தேதி வரை சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயில் பாதை வழியில் பேசிய சுமார் 2 கோடி பேரின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த ரயில் கொள்ளை சம்பவம் நடந்து 100 நாட்களை கடந்து விட்டது. ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி போலீசார் வழக்கை கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரயிலில் பணம் கொள்ளை போன வழக்கில் இதுவரை சிறு துப்புகூட கிடைக்கவில்லை. என்றாவது ஒருநாள் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்’’ என்றார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!