பெரம்பலுார் : பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் கேட்டுள்ளோம். அரசு அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது எங்களுடைய வாழ்வாதார பிரச்சனை என்பதால் வரும் 27 ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கின்றோம்.
அதற்கு அரசு செவிசாய்க்கவில்லையென்றால் வரும் மார்ச் 2ம் தேதி 16,549 குடும்பங்களோடு சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம் என அறிவித்துள்ளனர்.