The accident occurred in Kolli hills bike collapse: youth kills and 2 injured
நாமக்கல் அருகே கொல்லிமலை மலைச்சாலையில் பைக் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பொட்டணம் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் முரளிதரன்(20), இவரது நண்பர்கள் சேந்தமங்கலம் காந்திபுரத்தை சேர்ந்த சின்னக்கண்ணு மகன் மணிகண்டன்(20), வேலுச்சாமி மகன் செந்தில்குமார்(19). இந்த 3 பேரும் ஒரே பைக் வியாழக்கிழமை காலை கொல்லிமலை சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளனர்.
பைக்கை முரளிதரன் ஓட்டி வந்துள்ளார். கொல்லிமலை மலைச்சாலையில் 49 ஆவது கொண்டை ஊசி வளைவில் இறங்கும்போது எதிர்பாரதவிதமாக மொபட் சாலையில் இருந்து விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் உள்ள 47 ஆவது கொண்டை ஊசி வளைவில் வந்து விழுந்தது.
இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். முரளிதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன், செந்தில்குமார் இருவரும் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கொல்லிமலை வாழவந்திநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.