The adventure: the tip of the knife to the woman who was sleeping jewelry robbery in Perambalur


பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 32). அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் பெரம்பலூரில தங்கி வேலைக்கு சென்ற வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு வீட்டை சாத்திவிட்டு, அவரது தங்கை மற்றும் இரு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் உள்ள பிரபு என்பரவது வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முடியாத கொள்ளையர்கள் சத்யாவின் வீட்டுக்குள் கொள்யையடிக்க நோட்டமிட்டனர். அப்போது சத்யா அவரது தங்கை மற்றும் குழந்தைகளுடன் அயர்ந்து உறங்கி கொண்டிருந்ததை பார்த்த திருடர்கள் சத்தமில்லாமல், வீட்டின் தாழ்பாளை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த விலை உயர்ந்த வெளிநாட்டு கடிகாரத்தை எடுத்து கொண்டனர். பின்னர், உறங்கி கொண்டிருந்த சத்யா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை கத்தரித்து எடுத்தனர்.

அடுத்து 5 பவுன் தாலிக்கொடியை கத்தரிக்கும் போது சத்யா விழித்தார். அப்போது கொள்ளையர்கள் வைத்திருந்த கத்தியை காட்டி கத்தினால் குத்திவிடுவோம் என மிரட்டி உள்ளனர். இதில் பயந்து போன அவர் சத்தம் போடவில்லை. ஓரிரு நிமிடங்களில் கொள்ளையர்கள் தப்பித்து சென்றனர்.

கொள்ளையர்கள் கத்திரித்து செல்லும் போது ஒரு துண்டு தங்கசங்கிலியும் கிடைத்தது. இது குறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமாராவில் கொள்ளையடிக்க அடிக்க வந்த மூவரின் உருவப்படம் பதிவாகி உள்ளது. மேலும், தடயங்களை வைத்து கொள்ளையர்களை பெரம்பலூர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறித்து சென்ற சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!