The All India Builders Association is protesting to demand the establishment of a regulatory authority for construction materials!
அகில இந்திய கட்டுநர் சங்கம் பெரம்பலூர் மையம் சார்பில், கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட ஆகியவைளின் செயற்கையான விலையேற்றத்தை கண்டித்தும், விலைகளை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க கோரியும் தமிழக அரசின் கவன ஈர்ப்பு போராட்டத்தை நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நடத்தினர்.
இதில், பெரம்பலூர் பொறியாளர்கள் சங்கம், கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு, பெரம்பலூர் சிவில் இன்ஜினியர்கள் கூட்டமைப்பு
பெரம்பலூர் மாவட்ட கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
கவன ஈர்ப்பு போராட்டத்தில், கனிம பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், கட்டுமான கனிம பொருட்களின் விலையை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைத்துக்கொடுக்க வேண்டியும் கோசங்கள் எழுப்பினர். பின்னர், கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இதில் அச்சங்கங்களை சேர்ந்த மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.