The AMMA of the two-wheeler vehicle repair training

பெரம்பலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ப.மஞ்சுளாதேவி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அம்மா இரு சக்கர வாகன பழுது பார்த்தல் பயிற்சி துவக்கப்பட உள்ளதால் இப்பயிற்சியில் சேர தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

AutomOtive service Technician (Two Wheeler+Three Wheeler / Light Motor Vehicle / Power Tillers / Agriculture & Allied Machinerie என்ற தொழிற்பிரிவில் 4 மாத காலத்தில் தினசரி 4 மணி நேரம் வீதம் (பிற்பகல் 3மணி முதல் 7 மணி வரை) மொத்தம் 300 மணி நேரத்திற்கு அளிக்கப்பட உள்ளது.

வேலை வாய்ப்பற்ற, பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்த ஆண் பெண் இருபாலரும் உச்ச வயது வரம்பின்றி இப்பயிற்சியில் சேரலாம். அதிகபட்சமாக ஒரு அணிக்கு 20 நபர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை ( 9486063792 ) தொடர்பு கொள்ளலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!