the annual festival in honor of the ancient Church

பெரம்பலூர் அருகே மிகவும் பிரசித்திபெற்ற புனித சூசையப்பர் தேவாலயத்தின் 158வது ஆண்டு, ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, ஆடம்பர சப்பர பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், பாளையம் கிராமத்தில், 1861ம் ஆண்டு ஆங்கிலேய பாதிரியார்களால் கட்டப்பட்டு, 158 ஆண்டு பழமை வாய்ந்த புனித சூசையப்பர் தேவாலயம் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் மிகவும் பழமைவாய்ந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தேவாலயமாகத் திகழும் இந்த கோவிலின் 158 வது ஆண்டு, ஆண்டுப் பெருவிழா கடந்த 26ம்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி பாளையம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் பங்கு குரு ஜான்கென்னடி தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், ஊட்டி மறை மாவட்டத்தின், தமிழ்நாடு இறை அழைத்தல் மைய இயக்குனர் அலெக்ஸ் கலந்துகொண்டு முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வரப்பட்ட, புனித சூசையப்பர் கொடியை மந்திரித்துக் கொடிமரத்தில் ஏற்றிவைத்து, சிறப்புத் திருப்பலி நடத்தினார்.
விழாவின் 9ஆம் நாளான நேற்று மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், இரவு மாதா தேருடன், ஆடம்பர சப்பர பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மறைவட்ட குருக்கள் உட்பட பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் 10ஆம் நாளான இன்று மாலை சிறப்பு பாடல், திருப்பலிக்கு பிறகு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.