The assailant extorted money from the people who went by bike near Perambalur, claiming to be the police!
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் – தண்ணீர் பந்தல் அருகே கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ஜெயக்குமார் என்பவர் மொபட்டில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் போலீஸ் போல் உடை அணிந்து வந்த நபர் தான் போலீஸ் எனக்கூறியதோடு, ஜெயக்குமாரிடம் ஹான்ஸ் வைத்திருக்கியா என கேட்ட பின்னர், ஆர்.சி புக் மற்றும் லைசன்சை கேட்டு மிரட்டியதோடு, அவரது பாக்கட்டில் இருந்த ரூ.12 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, எஸ்.பி அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு சென்றுவிட்டான்.
இதே போல வேப்பந்தட்டை அரசு கல்லூரி அருகே கிருஷ்ணாபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த, சேலத்தை சேர்ந்த நாகேந்திரகுமார் என்பவரிடம், தான் போலீஸ் எனக் கூறிய அந்த மர்ம ஆசாமி நாகேந்திரகுமாரிடம் இருந்த ரூ.8 ஆயிரத்தை பறித்து சென்றார்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் மற்றும் அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இவ்வழிப்றி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்ஜெட் போன் அமேசானில்…