The ATMs in the Perambalur district collectorate office are in the open hours. The action was lost
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலத்தில் இன்று காலை, ஐ.ஓ.பி வங்கி சார்பில் ஏ.டி.எம் மையம் தொடங்கப்பட்டது. ஆனால், தொடங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே செயல்படாமல் முடங்கியது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த தரேஸ் அஹமது உத்திரவின் பேரில், ஆட்சியர் அலுவலகததில் ஏ.டி.எம் மையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது. வெகு கால தாமத்திற்கு பிறகு இன்று திறக்கப்பட்ட ஐ.ஓ.பி வங்கி கிளையின் ஏ.டி.எம் திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே செயல் இழந்தது.
புதிதாக ஏ.டி.எம். திறக்ப்பட்டுள்ளது என அறிந்த பொதுமக்கள் பணம் எடுத்து செல்லலாம் என ஆர்வமுடன் வந்த போது ஏ.டி. எம். இயந்திரம் செயல்படாமல் முடங்கி இருந்ததை கண்டு வெறும் கையுடன் மையத்தில் இருந்து திரும்பினர்.
சுமார் 25 லட்சம் மதிப்புள்ள ஏ.டி.எம் இயந்திரம், அதற்கு கட்டமைப்பு பணிகள் ஆகியவற்றை முறையாக வங்கி அதிகாரிகள் மேற்கொள்ளாததால் இது போன்றே பெரம்பலூரில் பல வங்கியின் ஏ.டி.எம் மையங்கள் செயலிழந்து கிடக்கின்றன.
அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால், வங்களில் பணம் செலுத்த முடியாமலும், பணத்தை எடுக்க முடியாமலும், தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தனியார் வங்கி ஏடி.எம்.களே அதிக அளவில் பணத்தை வழங்கி வருகின்றன. ஆனால், அரசு வங்கிகள் கட்டணத்தை வசூலிக்கும் ஆர்வம் சேவை செய்தில் காட்டுதில்லை.
திறந்த முதல் நாளே ஏ.டி.எம். மையம் இப்படி என்றால் ஆண்டு முழுவதும் எப்படி இருக்குமோ என பொதுமக்கள் நொந்து போயினர்.
பெரம்பலூர் ஐ.ஓ.பி வங்கி ஏ.எம்.மிற்கு பதிலாக வேறொரு வங்கியின் ஏ.டி.எமை அந்த இடத்தில் வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.