The Auto Association protesting against the original driver’s license request demonstrated at Perambalur

அசல் ஓட்டுநர் உரிமம் கோரும் முறையை கைவிடக்கோரி ஆட்டோ சங்கத்தினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர், இன்று பெரம்பலூரில் ஆட்டோக்கள் ஓடவில்லை

பெரம்பலூர்: அசல் ஓட்டுநர் உரிமம் கோரும் முறையை கைவிட வேண்டும், நகல் வைத்திருப்பதை அனுமதிக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை அரசின் கட்டுப்பாட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட 3 +1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான ஓட்டுநர்கள் தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் ஒர நாள் வேலை நிறுத்தம் செய்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் பி.பிரகாஷ் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க பொருப்பாளர்கள் எஸ்.மல்லீஸ் குமார், எஸ்.சிவசங்கர், எம்.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி சிறப்புரையாற்றினார்.

ஆட்டோ சங்க மாநிலக்குழு சி.சண்முகம், மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், சிஐடியு பொருப்பாளர்கள் பி.முத்துசாமி எ.கணேசன், ஆர்.இராஜகுமாரன், எஸ்.அகஸ்டின், பி.ரெங்கராஜ், கே.மணிமேகலை, கல்யாணி, பி.அன்பழகன் உள்பட கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஏராளமான ஆட்டோக்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!