The bail plea of the son who attacked his father near Perambalur was dismissed!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில், குழந்தைவேல் என்கிற தொழிலதிபர் சொத்து பிரச்சினை தொடர்பாக அவரது மகனால், கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி கொடூரமாக தாக்குதலுக்குள்ளானார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு தந்தையும்-மகனும் சமரசமாகினர். இதில் புகார் வாபஸ் பெறப்பட்டது

இதனிடையே தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த குழந்தைவேல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அவரது படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரது இறுதி சடங்கிற்கு பின்னர் தாக்குதல் சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட இரு புகார்களின் அடிப்படையில் கை.களத்தூர் போலீசார் சக்திவேல் என்கிற சந்தோஷை தலா 8 பிரிவுகளின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள சக்திவேல் என்கிற சந்தோஷ் தரப்பின் சார்பில், அவரது வழக்கறிஞர் ஜாமீன் கேட்டு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 13ம் தேதி திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், ஜாமீன் மனுவை முதன்மை மாவட்ட
நீதிபதி பல்கீஸ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!